fbpx

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பசலுல்லா (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு என்று கூறி, குவைத்தில் உள்ள ஏஜென்டிடம் சில பெண்களை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். ஜூன் 15ம் தேதி அன்று குவைத் செல்வதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 இளம்பெண்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அப்போது அவை போலியானது என்று தெரிய […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,875-க்கு விற்பனையாகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, ரூ.4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

அணைக்கட்டு அருகே பள்ளி மைதானத்தில் ஓடிய 9ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற மாணவன், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்தான். சம்பவத்தன்று வழக்கம்போல மாணவன் மோகன்ராஜ் பள்ளிக்குச் சென்றான். மதியத்துக்குப் பின்னர் அந்த மாணவனின் வகுப்புக்கு ஆசியர்கள் யாருமே வராததால், மாணவர்கள் கத்தி கூச்சலிட்டு […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Manager – Accounts பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பொறியியல் படிப்பில் ஏதாவது ஒரு டிகிரி கட்டாயம் […]

மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்து 3 நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன் (64) அவரது மனைவி மாலதி (55) மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் […]

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால், வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதியை நாளை அதிகாலை கரையை […]

கனமழை காரணமாக நாளை முதல் நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதி கனமழை பெய்வதற்கான ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் 28 […]

வாலாஜா அருகே அணைக்கட்டில் 5 மாத குழந்தையின் தாயை கொலை செய்த வழக்கில் கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன்-சாந்தி தம்பதியினரின் 3-வது மகள் ரேஷ்மாலதா (21). இவருக்கும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 5 மாத பெண் குழந்தை உள்ளது. தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த ரேஷ்மாலதா […]

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக இரண்டு குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கொடுத்ததில், 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தாய் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே போடம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாதேஷ் (27). இவரது மனைவி ஞானமலர் (21). 4 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பிரபாஷ் என்ற மகனும், ஆதிரா என்ற 9 மாத […]

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது இன்று மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று தமிழகத்தில் அதி கனமழை பெய்வதற்கான […]