fbpx

ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் வசித்து வரும் அடைக்கலம் மகன் முருகானந்தம் (20). இவர் தனது பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி(65) ஒருவர் அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அந்த மூதாட்டி முருகானந்தத்திடம் பைக்கில் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மங்களம் அருகே வந்தபோது அங்கிருக்கும் குளக்கரையில் வைத்து முருகானந்தம் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் […]

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை யாராலும் தடுக்க முடியாது என்று  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு  காவல்துறை அனுமதியளிக்கவில்லை . இதற்கு கண்டனம் தெரிவித்து  கோவை தெற்கு பா.ஜக. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் […]

கனியாமூரில் கலவரத்துக்குள்ளான பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், […]

ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வரும் வி.ஜே. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடியைப் பற்றி சில தகவல்கள் பரபரப்பரப்பாக பேசப்பட்டு வரகின்றன.உண்மையாகவும் இருக்கலாம் என்ற வகையில்தான் பேச்சு அடிபடகின்றது. வி.ஜே.மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் திருப்பதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். வரவேற்பும் அதே சமயத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர். இவர்கள் திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆயிரம் விமர்சனங்களையும் தாண்டி தினமும் செய்திகளில் இடம்பிடித்து […]

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் ’பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், தற்போது […]

கோபிச்செட்டிப்பாளையம் அருகே, புரோக்கர் கமிஷனுக்காக 35 வயது இளைஞரை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட பெண், வாட்ஸ் அப் குறுந்தகவலால் கையும் களவுமாக சிக்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த 35 வயது இளைஞர், தனது திருமணத்துக்காக புரோக்கர்கள் மூலம் பெண் தேடி வந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூலம் சரிதா என்ற ஏழைப் பெண் இருப்பதாகத் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே இருக்கும் பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (50). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நாகராஜ் (24), சிவகுமார் (22) என்ற மகன்களும், தனலட்சுமி (20) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லட்சுமணன் நேற்று தனது வீட்டின் அருகே இருக்கும் வெற்றிலை தோட்டத்தில் புதையல் எடுக்க குழி தோண்டினார். மேலும் அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை […]

சென்னை பறக்கும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் 5 மாணவர்கள் ஜன்னலில் கால் வைத்து ரயிலின் மேற்பகுதியை பிடித்துக் கொண்டு ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டனர். விபரீதத்தை உணராமல் மாணவர்கள் தலைகீழாக தொங்கி அட்டகாசம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் […]

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர்  வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு […]

சென்னை அயனாவரம் பகுதியில் வசிப்பவர் ரவுடி ஆகாஷ். இவர் பெரம்பூரை சேர்ந்த பால கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து, பால கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டேரி காவல்துறையினர் கடந்த 20-ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதன் பின்னர், 21-ஆம் தேதி ஆகாஷிடம் காவல்துறையினர் விசாரண செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி ஆகாஷ் அதிக போதையில் இருந்தால் […]