வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் தன்னுடைய காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் போண்டாமணி. இலங்கை தமிழரான போண்டா மணிக்கு தற்போது உடல்நலக்குறைவால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்த போண்டாமணிக்கு தனுஷ், விஜய் சேதுபதி, போன்றோர் ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு […]
நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் சோதனை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் 8 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டியது, உள்நாட்டில் மத கலவரத்தை தூண்டுதல், இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், […]
பூமியும் அதன் நிலப்பரப்புகளும் மில்லியன் கணக்கான வருடங்களில் உருவாகி இருக்கின்றன. சில நேரங்களில் டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் உண்டாகும் பூகம்பங்களால் முழு மலைத்தொடர் உருவாகி இருக்கிறது. சில நேரங்களில், எரிமலை வெடிப்பு புதிய தீவுகளை உண்டாக்கும். விஞ்ஞானிகள் தற்போது ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பால் உண்டான புவியியல் மாற்றத்தால் மத்திய டோங்கா தீவுகளில் ஒரு “குழந்தை” தீவைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். […]
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்துவிதமான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் 16,000 ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் செப்.10-ம் தேதி அறிவித்தார். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பகுதி நேர பயிற்றுநர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் […]
உடலின் சீரான செயல்பாட்டிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.. இல்லையெனில் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் இளம் வயதிலேயே முதுகு, மூட்டு அல்லது முழங்கால் வலியைப் பற்றி புகார் கூறுகின்றனர்.. எலும்புகள் பலவீனமாக இருப்பதும் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாலும் தான் இந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. எலும்பு என்பது ஒரு டைனமிக் வாழ்க்கை திசு ஆகும், இது உடற்பயிற்சி […]
21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]
தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை […]
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க […]
பருவமழை நோய்களைக் கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சலுக்கான தனிச் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் […]