fbpx

புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (50). இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதியண்று, இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கி […]

ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால்  ஆத்திரமடைந்த மாணவர் புகார் […]

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மேட்ரிமோனியல் (Matrimony) தளத்தில் போலி விவரங்களைப் பதிவிட்டு ரூ.1.6 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மோசடியில் ஈடுபட்ட தம்பதியில், ஆண் ஜார்கண்ட்டைச் சேர்ந்த பப்லு குமார் என்றும், பெண் பீகாரைச் சேர்ந்த பூஜா குமாரி என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள், இருவரும் இந்த மோசடி மூலம் சுமார் 35 பேரை ஏமாற்றி […]

வங்காளதேசம் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று பக்தர்களை கோவிலுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகலில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. எதிர்பாரத நேரத்தில் படகு கவிழ்ந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை […]

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]

வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் […]

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருப்பதால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதால், சீரியல் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசனும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, தமிழில் […]

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]

அரசு விழாவில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி  தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், […]

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் […]