fbpx

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை வென்றதை அடுத்து பாகிஸ்தான் அணியின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் மற்றும் இறுதியில் […]

வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தி இதற்கு முன் ஆரம்ப […]

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார். டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு […]

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் நிரூபிக்கவில்லை எனில் அரசியலில் இருந்து விலகுவாரா என்று செல்லூ ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி பலருக்கு ஓய்வூதியம் வழங்கியதாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு “ […]

‘சரவணன் மீனாட்சி’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை லக்ஷ்மி வாசுதேவன், ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோளுடன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உட்பட வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் தனது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக கூறியுள்ளார். தனது நெருங்கிய வட்டாரத்திற்கு தன்னைப் பற்றி தெரியும் […]

மலையாளத் திரையுலகில் பெரும் பங்களிப்பை வழங்கிய நடிகை ரேவதி, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கேரள மாநிலத்தால் கௌரவிக்கப்பட்டார். பிரபல நடிகை ரேவதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.. ஆரம்பக்கட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர படங்களில் நடித்து வருகிறார்.. 3 வெவ்வேறு பிரிவுகளில் 3 தேசிய […]

மத்திய அரசு சார்பில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது… மக்களுக்கு உதவும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றனர்.. வங்கிகளை போன்றே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் திறப்ப பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உங்கள் கணக்கும் தபால் அலுவலகத்தில் இருந்தால், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். தகவல் தொடர்பு […]

முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ‘கழுதை தேய்ந்து […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.. தமிழ்நாட்டில் […]

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து நவம்பர் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38%ஆக உயரும்.. […]