fbpx

உத்திரபிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக ஐந்து சிறுவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கானாமல் போன ஏழு வயது சிறுவன் அலிகார் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆறு தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், 100 சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் சிக்கியுள்ளனர். அந்த மாணவர்களிடம் விசாரணை […]

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எழுதும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் எழுதினர். சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு […]

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக, மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட சிவலிங்கத்தை இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம், கீழ் நீதிமன்றம் உத்தரவுப்படி நடத்திய வீடியோ ஆய்வின் போது, ஞானவாபி மசூதியின் வசூகானாவில் (தொட்டியில்) சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தரப்பு வாதத்தில் கூறியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கை முஸ்லிம் தரப்பு வாதத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூலை […]

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் ‘பான்கார்டு’ கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், தற்போது புதிய விதிமுறை கொண்டு […]

தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என்று கூறுவது தவறான தகவல் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வன்முறையில் பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் […]

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகில் உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் குடியிருப்பவர் ஜெயக்குமார். இவர் பெங்களுருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஜெயக்குமாருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் பூவரசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுங்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயக்குமார் குடும்பத்துடன் பெங்களுரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஜெயக்குமார், மனைவி மற்றும் மகளுடன் விண்ணுவாம்பட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை […]

நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது […]

கோவில்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் காவல்துறையினால் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்குத் திட்டங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா (73 ). இவர் விவசாயி. இவரது மகன் ஜெயக்குமார் (43). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவம் நடந்த […]

பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு இதுவரை எந்த மாநிலங்களும் பரிந்துரை செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரி விதிப்பால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? எனவும் இதனுடைய வரியைச் சீராக அமைக்க ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு […]

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்2 படித்து வந்த மாணவி விடுதியின் 3-வது மாடியில் இருந்து […]