பிஎம் கேர்ஸ் நிதியத்தின் புதிய உறுப்பினர்களாக தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் (PM CARES) அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில், […]
ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டாவில் வசிக்கும் கல்லூரி மாணவர் ராஜ்மோகன் சேனாபதி (21). இவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜ்மோகனின் அண்ணன் பிஸ்வாமோகன் (25). இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இந்நிலையில், ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதை அவரது அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார். இதனால், அடிக்கடி அண்ணனுக்கும், தப்பிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என கூறி […]
நடிகை சமந்தா பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பல ரசிகர்களை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து […]
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, 6-வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் ஜெர்லின் அனிகா இந்த சாதனையைப் […]
கர்நாடகாவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்.. புரோட்டீன் பவுடரை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு இயக்கத்தை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி, தனது தொகுதியில் புரோட்டீன் பவுடரை உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக […]
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவித உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. 2011 முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி வழங்கினார்கள். […]
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது. மதுரையில் காந்தியடிகள் அரை […]
கார்பரேட் நிறுவனங்களின் தரகராக செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நீரா ராடியா மீது எந்த குற்ற முகாந்திரம் இல்லாத காரணத்தால் 14 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது தொழிலதிபர்கள் சார்பில் பெரு நிறுவனங்களின் தரகராக நீராராடியா செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் , இவர் மீது 2 ஜி ஊழல் வழக்கு உள்பட 14 வழக்குகள் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இதற்கு ஆதாரமாக இவரது […]
மாநில கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் சார்பில், மாநிலக் கல்வி கொள்கை வகுப்பதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை இன்று […]
இந்த டிஜிட்டல் யுகத்தில் பலரும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் ஹரியானாவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சைபர் கிரைம் தொடர்பான 36,996 புகார்கள் பெறப்பட்டுள்ளன.. இவற்றில் 20,484 புகார்கள் விசாரணையில் உள்ளன, 15,057 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஹரியானாவின் கைத்தால் பகுதியைச் சேர்ந்த விபுல் என்ற நபர், பரிசு தொகையை வென்றதாக […]