பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் காவல்துறையினர் […]
ஈரோடு மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் . இவருக்கு புஷ்பராஜ் (13), அபினேஷ் (6) என்ற இரு மகன்கள் ஹர்த்திகா (3) என்று மகளும் உள்ளனர். அபினேஷ் என்ற சிறுவன் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வழக்கம் போல […]
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி […]
சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் மருத்துவராக அவர் பணியாற்றினார். மேலும் பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் சென்றார். இதற்கிடையில், கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு பேகூர் காவல எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் இருக்கும் காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் உயிரிழந்தார். […]
விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரிசர்வ் வங்கியின் புதுமைஉருவாக்கல் மையம் உருவாக்கிய உடனடி கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அதாவது விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை ஃபெடரல் வங்கி தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெடரல் வங்கியின் தலைவர் ஷியாம் சீனிவாசன், விஜேந்திர பாண்டியன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்று […]
பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக […]
ஆக்ரா டெல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஹாஸ்பிடலில் ஐசியூ பிரிவில் பொறுப்பாளராக வேலை செய்து வருபவர் தினேஷ் கோபால். இவர் தனது கள்ளக்காதலியுடன் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இது பற்றிய தகவல் அவரது மனைவி நீலத்திற்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் ஹோட்டலுக்கு வந்தார். ஹோட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த […]
கோச்சடையான் அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்காக ரூ.6.2 கோடி பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கில் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது… நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது படம் தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.6.2 கோடி பெற்றுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்துள்ளார். முரளி மற்றும் லதா […]
துபாய்க்கு வேலைக்கு சென்ற மனைவியை வீட்டிற்கு வரவழைக்க பெண் குழந்தைகளை தந்தையே கொடூரமாக தாக்கிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள வீரபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தாவித் – நிர்மலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கும் நிலையில், தாவித் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம், குடும்பத்திற்கு செலவு செய்யாமல் குடித்தே அழித்து வந்துள்ளார். தனது பிள்ளைகளை […]
எழுத்துப்பிழை என்பது பொதுவான பிரச்சனையாகும்.. அது தமிழாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் சரி.. அல்லது அவரவர் தாய் மொழியாக இருந்தாலும் சரி.. எழுதும் போது மட்டுமல்ல கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்பட்ட சொற்களை தி நாலெட்ஜ் அகாடமி கண்டறிந்தது.. அதன்படி கூகுளில் எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியல் வெளியாகி உள்ளது. எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் Separate (92,000) Zucchini (60,400) Questionnaire (46,000) Potato (38,000) […]