fbpx

மியான்மரில் இருக்கும் பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் இருக்கும் லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இங்குள்ள புத்த மடாலயத்தில் இருக்கும் பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஆர்டி […]

மராட்டிய மாநிலம் புனேவின் யெவலேவாடி பகுதியை சேர்ந்த19 வயது இளம் பெண் கடந்த 17-ஆம் தேதி சோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 9.30 மணியளவில் சோமாட்டோ டெலிவரி ஊழியர் ரயீஸ் ஷேக் (40) என்பவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். உணவு டெலிவரி செய்த பின் நன்றி என்று கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்தமிட்டு உள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். […]

நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நலன் மற்றும் ஆதரவிற்காக, பல திட்டங்கள் நடந்து வருகின்றன, அதன் நேரடி பலன்கள் தொலைதூர விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றனர்.. உதாரணமாக, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம், மானிய விலை டீசல் திட்டங்கள் என பல திட்டங்களை சொல்லலாம்.. அந்தவகையில் விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) யோஜனா அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த அட்டையின் மூலம் நாட்டின் விவசாயிகள் மிகக் குறைந்த வட்டியில் […]

மராட்டிய மாநிலம் புனேவில் கல்லூரி மாணவிக்கு உணவு டெலிவரி செய்ய சென்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.   புனேவில் கோந்த்வா பகுதியில் தனியார் பொறியில் கல்லூரியில் படிப்பவர் 19 வயது இளம் பெண். செயலி மூலமாக இரவு உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 9 மணி அளவில் ரயீஸ் சைக் என்ற இளைஞர் உணவு டெலிவரி செய்ய வந்துள்ளார். வீட்டில் யாரும் […]

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணியால் ஈர்க்கப்பட்டு அயோத்தி மாவட்டத்தில் அவருக்கு கோயில் கட்டியுள்ளார். பிரபாகர் மவுரியா என்ற அந்த நபர் இந்த கோயிலை பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் பாரத்குண்ட் பகுதியில் அமைத்துள்ளார். இந்த இடம் ராமர் 14 வருடம் வனவாசம் செல்வதற்கு முன் அவரின் சகோதரரான பரதனிடம் விடைபெற்ற இடமாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் வில் அம்புடன் முதல்வர் […]

விதிமுறை மீறி கட்டப்பட்ட மத்திய பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் நாராயண் ரானேயின் ‘ஆதீஷ்’ பங்களா, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவை ஆய்வு மேற்கொண்டது. அதில், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதால், நாராயண் ரானேவுக்கு எதிராக மும்பை […]

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று யாரும் அசால்ட்டாக இருக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இன்புளூயன்ஸா காய்ச்சல் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை […]

இங்கிலாந்து அரச குடும்பத்தின் செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிகப்பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்துள்ளன. 1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் பின்னர் அரச செங்கோலில் பதிக்கப்பட்டது. உலகின் மிக பெரிய வைரமான […]

கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் தொடர் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், அறநெறி பாடத்தின் (moral education) ஒரு பகுதியாக பகவத் கீதை கற்பிக்கப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செப்டம்பர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர் எம்.கே.பிரனேஷ், ”எதிர்ப்புகள் இல்லை என்றபோதிலும், பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த மாநில […]

சண்டிகரில் மாணவி ஒருவர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மர்மநபர் அழைப்புவிடுத்து மிரட்டியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் 60 சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது ஆண் நணபரிடம் ஷேர் செய்ததாக கூறி .. விடுதியில் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் […]