fbpx

துல்கர் சல்மான் தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்று ரசிகர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகனாக துல்கர் சல்மான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “சீதா ராமம்” படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து இந்தி படத்திலும் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் வந்து […]

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, […]

பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டதையடுத்து ஆத்திரமடைந்த பெண் மருத்துவரைக் கொலை செய்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையைச் சேர்ந்த மருத்துவர் விகாஸ் பெங்களூருவில் வசித்து வருகின்றார். 27 வயதான இவருக்கும் மைகோ லே அவுட்டைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் பிரதீபாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பிரதீபா ஆர்க்கிடெக்டாக தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றது. சமூக வலைத்தலத்தில் கடந்த […]

மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் காலை மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் பீட் மாவட்டம் அருகே இருக்கும் ஜாம்கேட் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் போன் செய்த அவர் தென்மும்பை ஜாவேரி பஜார் பகுதியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து காவல்துறையினர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவினருடன் ஜாவேரி பஜார் பகுதிக்கு சென்று […]

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர். தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். […]

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 வருடங்களில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுளது. இந்நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு தீா்ப்புகள் வெளியாகி இருக்கின்றன. 2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் பலியான நிலையில், 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட், குண்டுவெடிப்பு […]

உத்தபிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகின்றது. உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரான பூரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குள்பட்ட சிறுமிகள் 200 பேர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. விளையாட்டு அரங்கத்தில் உள்ள கழிவறையில் பெரிய தட்டில் உணவு […]

சென்னை, போதை விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடர்பான போஸ்டரை துவக்கி வைத்த பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் துவங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதில் நாங்களும் கலந்து கொள்வோம். கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறோம். போதைக்கு அடிமையானவர்கள், உடன் இருப்பவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டாக தான் இந்த […]

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர் மாவட்டங்கள், புதுவை […]

தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்புளுயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் […]