fbpx

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, ”அதிமுகவில் மிக மூத்தவரான பொன்னையன் பல உண்மைகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பதாக தெரிவித்தார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என பொன்னையன் மாற்றிப் பேசுவதாகவும் புகழேந்தி கூறினார். முன்னாள் […]

கூகுள் மேப்பை நம்பி இரவு நேரத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர், தண்ணீர் நிறைந்த வயலில் காரை பார்க்கிங் செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாலசித்ரா மலைப்பாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்ல அவர்கள் முடிவு செய்து […]

சசிகலா மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்கள், தற்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சென்றதாக திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் நிகழ்ச்சியில் திவாகரன் பேசுகையில், ”அவசர தேவை கருதி சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கிறேன். ஜெயலலிதாவை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் எல்லாமே சசிகலாவுடன் அன்போடும், ஆதரவோடும் இருக்கின்றனர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் சாதாரண கட்சி தொண்டரை கூட அமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்தான் […]

தென்காசி மாவட்டத்தில் கல்யாணமான மறு நாளே 15 லட்சத்துடன் மணப்பெண் கானாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு நாட்கள் நெருங்க ஆரம்பிக்கவும் பவித்ராவின் குடும்பத்தினர் முத்துகுமார் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். திருமண செலவுக்கு பணம் இல்லாததால் திருமணம் செய்ய வேண்டுமானால் […]

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை உக்ரைன் மீதான போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் […]

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இரவுக்குள் ராஜினாமா செய்துவிடுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் ராஜினாமா கடிதம் உங்களுக்கு கிடைக்கச் செய்வேன் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் புதிய அதிபர் திட்டமிட்டபடி வரும் 20ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் […]

குறுகிய சில காலத்திற்குப் பிறகு மீண்டும் குற்றம் இழைக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து செனட் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த மசோதா 145 செனட்டர்களின் ஆதரவை பெற்றுள்ளது. 2013ஆம் வருடத்திற்கும் மற்றும் 2020 ஆம் வருடத்திற்கும் இடையில் தாய்லாந்து நாட்டின் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் மீண்டும் 4848 பேர் பாலியல் குற்றங்களை செய்துள்ளனர்.என்று […]

தான் ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆகிவிட்டதாகவும் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு சண்டை போட்டுக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த சசிகலா, காப்பகத்திற்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டினார். பின்னர், மாணவி லட்சுமி தனது கால்களால் வரைந்த ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்தார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய அவர், […]

’கோவிலாக நினைக்கக் கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர் ஓபிஎஸ்’ என்று கோகுல இந்திரா கடுமையாக பேசியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழுவுக்கான தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீர்ப்பு […]

கேரளாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளிகள் மூன்று […]