fbpx

தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக பேசிய மீன் வியாபாரியை வெட்டிக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர் நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் மீன் வெட்டும் வேலை செய்பவர் சிரஞ்சீவி (24). இந்நிலையில், சிரஞ்சீவின் வீட்டிற்கு சென்ற பாண்டியன், அவரது மனைவி பவானியை ஆபாசமாக திட்டி கத்தியை […]

அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் நேற்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதால் பதட்டம் நிலவியது.. […]

அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் […]

விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. கடந்த ஜூன் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்தல், விலையில்லா சீருடை விநியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நர்சரி, […]

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள் தொகை பிரிவு, உலக மக்கள் தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு மக்கள் தொகை தினம் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள் தொகை […]

கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி வரம்பு குறித்து முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டம் இன்று நடைபெற உள்ளது…. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47வது ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த மாதம் சில சரக்குகள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை மாற்றியமைக்க முடிவு செய்தது, இதில் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. […]

தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதிக்கு விதிக்கப்படும். மேலும், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,615 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 13,265 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் புரட்சியாளர்களாக மாறியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கையே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றி சூறையாடினர். […]

ரவீந்திரநாத் எம்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “திமுக ஒரு தீயசக்தி… அதை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். அந்த திமுக-வை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’ எனக் கூறி அதிமுகவில் […]