கமல்ஹாசனுக்கு இப்போதுதான் கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்துள்ளதாகவும், தொகுதி மக்களின் மனுக்களை வாங்கிக் கொண்டு அதனை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் […]
‘வேட்டையாடு விளையாடு’ சினிமா பாணியில் சென்னை மென்பொறியாளர் ஒருவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து. இவர், கோவையில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், நல்லகண்டன் பாளையத்தை சேர்ந்த மென்பொறியாளர் விணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. […]
‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வெளியான பிறகு 6 அல்லது 9 மாதங்களுக்கு […]
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு […]
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் […]
தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால், அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,664 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,555 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
’வெயில்’ படத்திற்குப் பிறகு நடிகர் பரத் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் ‘வெயில்’. தமிழில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதைப் பெற்ற இப்படத்தில், பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நாயர், ஸ்ரேயா ரெட்டி, ரவி மரியா, ஜி.எம். குமார், சாம்ஸ், டி.கே.கலா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எளிமையாக […]
நடிகர் ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 80-களின் இறுதியில் இருந்து, 90-களின் தொடக்கம் வரை பரபரப்பான ஹீரோவாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது படங்கள் வெற்றிபெற்று வந்தது. இவரின் படத்தை தயாரித்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் […]
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணிக்குள் விளையாட முடியாது என்றும், வெறும் 10-15 பந்துகள் மட்டும் விளையாடும் ஒரு வீரரை எப்படி அணிக்குள் எடுப்பீர்கள் என்றும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்ததில் இருந்தே ஷமி முதன்மை அணிக்குள் எடுக்காதது குறித்தும், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் ஆடும் அணியில் இடம்பிடிப்பார் […]