fbpx

அசாம் மாநிலத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த தெரு நாய்களை காவல்துறையினர் மீட்டனர். கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையோரத்தில் சாக்கு மூட்டைகளில் நாய்கள் கட்டப்பட்டு 31 மூட்டைகள் கிடந்தன. இதை பார்த்த உள்ளூர் வாசிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு நாய்கள் மூட்டைகளில் கட்டப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து விலங்கின ஆர்வலர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் மூட்டையில் இருந்த நாய்களை மீட்டு […]

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 19, 20,21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ […]

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக, ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு அகதியாக சில வருடங்களுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (34). இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை […]

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. து.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.. மேலும் ரஜினியின் புதிய லுக் போஸ்டரையும் வெளியிட்டது.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த தகவல் உறுதியாகும் […]

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை  என கூறப்பட்டுள்ளதால் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அச்சாம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 13 பேர் […]

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார். மாதம் தோறும் கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் கடன் தொகை 1.30 லட்சம் பாக்கி இருந்தது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷை தொடர்ந்து தொல்லை […]

விவசாயி ஒருவரின் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையின் போது வாகனத்தின் முன் வழிமறித்த கர்ப்பிணியை கண்டும் காணாமல் டிராக்டரை ஓட்டிச் சென்றதால் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்லேஷ் மேத்தா . செவித்திறன் குறைபாடு உடைய விவசாயியான இவர் மகிந்த்ரா நிறுவனத்தில் லோனில் டிராக்டர் வாங்கியுள்ளார். அதிகபட்ச தவணைகளை கொடுத்துவிட்ட நிலையில் ரூ.1.3 லட்சம் மட்டுமே பாக்கி வைத்திருந்திருக்கின்றார். இதனால் அடிக்கடி அந்த பணத்தை கேட்டு […]

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியில் வசிக்கும் டிரைவர் அருள்மணி (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5), அகிலன் (3)  என்ற இருமகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோதிலட்சுமி குடும்ப பிரச்னைக் காரணமாக அதே பகுதியில் இருக்கும் அவரது தனது தாய் ஜானகி  வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். […]

கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 100 வருடங்களில் சென்னையில் இருக்கும் மின் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. 2050-ஆம் […]