திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச்செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு பின்னர் மனைவியின் விருப்பத்துக்கு எதிராக அவருடன் கணவர் உடலுறவு வைத்தால், அதை பாலியல் குற்றமாக கருத முடியாது என விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், […]
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தில் குடியிருப்பவர் சுரேஷ் (36). கார் வாடகைக்கு சவாரி செல்லும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. திவ்யா(11) என்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மகளும், கதிர்வேல் (9) என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பச்சையம்மாள் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் உண்டானது. எனவே கணவன், மனைவிக்குள் அடிக்கடி சன்டை […]
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. அந்த வகையில் திரை பிரபலங்கள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க அக்கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.. அந்த வகையில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுக எம்.எல்.ஏக்கள் கு.க செல்வம், டாக்டர் சரவணன் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.. திமுக ஆட்சி அமைந்த பிறகு கூட, திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் […]
“தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ஒரு கோஷ்டி என்றும் அவர் கட்சி அல்ல என்றும் சாடினார். கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் […]
தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீதித் துறை குறித்து விமர்சித்ததற்காக, தம்பி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ […]
சென்னையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திற்காக புதிய மணல் குவாரிகள் திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் […]
தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக இருக்கும் முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். மனுதாரர்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆனதால், மேலும் மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரிவு போலீசார், போலீஸ் ஸ்டேஷனிலேயே […]
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் குடியிருப்பவர் ராஜசேகரன் (39). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், அந்த பகுதியை வசிக்கும் அருணதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நியையில், சம்பவத்தன்று ராஜசேகரனின் தந்தை தட்சிணாமூர்த்தி மாடு ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அருணதேவன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார். அப்போது, அவர் தட்சிணாமூர்த்தியிடம், கீழே விழுந்ததற்கு அவர் தான் காரணம் என்று […]
உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.. ஃபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர் பட்டியலில் இந்திய தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி தற்போது உலகின் இரண்டாவது பணக்காரராக மாறி உள்ளார்.. அதானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது $155.5 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.37 லட்சம் கோடியாக உள்ளது. ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, அதானியின் நிகர மதிப்பு […]