அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் […]
ஒடிசாவில் வேறொரு பெண்ணுடன் வாழ பணம் இல்லாததால் மனைவியை ஏமாற்றி கிட்னியை விற்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் கோடமேட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவுக்கு அகதியாக வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போதுதான் இவர் மது போதைக்கு அடிமையானவர் என்ற விஷயம் ரஞ்சிதாவுக்கு தெரியவந்தது. இருந்தாலும் இவருடன் குடும்பம் நடத்த நினைத்த […]
கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருடப்படுகிறது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில், ஆற்றுக்கு செல்வதற்கு […]
உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாது என்று மத்திய அரசு தனது முடிவை தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்பினர். கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்பிச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே […]
கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் தன்வீர்சேட் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது;- கர்நாடகத்தில் வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் அனைத்து அரசு பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 35 ஆயிரம் அரசு பேருந்துகள் உள்ளன. மின்சார பேருந்துகளாக மாற்ற தேவையான உதவிகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்து வருகிறார். மின்சார பேருந்துகளாக மாற்றுவதால் செலவு குறையும் மேலும் […]
தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை, தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு தேர்வை வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளி கல்வித்துறையால், அறிவுறுத்தப்பட்டுள்ளது
விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்த நிலையில், ஷோயப் அக்தரும் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தனது 70ஆவது சதத்தை அடித்த விராட் கோலி, அதற்கு பிறகு சீரான விகிதத்தில் ரன்கள் அடித்தாலும் 3 வருடத்தில் 100 என்னும் இலக்கை அடைய முடியாமல் தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்நிலையில், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் […]
சென்னை விமான நிலைய வளாகத்தில் வேன் ஓட்டுனர் தன் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுந்திர ராஜன் (38) . இவர் சென்னை விமான நிலைய வளாகத்தில் சரக்கத்தில் , தனியார் சரக்கு நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தனியாகத்தான் சென்னை வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான விழுப்புரத்திலேயே உள்ளனர். இந்நிலையில் நேற்று […]
உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் இருக்கும் பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, பெற்றோர், உடல்நல குறைவால் அவதிப்பட்ட தனது நான்கு வயது குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து, வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு போகும்படி கூறி அனுப்பினர். அந்த வார்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் நீண்ட வரிசை இருந்தது. எனவே, வரிசையில் நீண்ட நேரம் பெற்றோர் […]
“ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம்” என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள மருதம் பல்பொருள் அங்காடி மற்றும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்காடியில் விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு […]