fbpx

குவைத், ஓமன் நாடுகளுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 30 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் மற்றும் உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் போன்றவை குவைத் நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் […]

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சசிகலா எங்களுடன் இணைவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் […]

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியகிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி , செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு பி.சி.சி.ஐ.-ல் இதுவரை விதிமுறைகள் இல்லை. எனவே இவர்களின் பதவிக்காலம் நீட்டிப்புக்கு பி.சி.சி.ஐக்கு அனுமதி தேவை எனவே இது தொடர்பாக இந்த  விவகாரத்தில்  விதிகளை திருத்த பி.சி.சி.ஐக்கு அதிகாரம் வேண்டும் எனவே  அனுமதி கேட்டு […]

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபார சதம் விளாசிய விராட் கோலி, மீண்டும் ஃபார்ம்-க்கு திரும்பியுள்ளார். கோலியின் இந்த சதத்தால், தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 15-வது இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் சர்மா 14-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் […]

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் ’’அயோடைஸ்டு.’’ அல்லாத 13 டன் உப்பு பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது. இதில் அயோடைஸ்டு அல்லாத உப்பு விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்வதற்காக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஸ் வந்திருந்தார். உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்படுகின்றதா? தரமாக வழங்கப்படுகின்றதா? என்பது உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் தரம் […]

‘சென்னையில் வாடகைக்குத்தான் தங்கியுள்ளேன் என்றும் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு இல்லை’ என்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு மட்டுமே குடியிருக்கிறேன். எனக்கு என அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட வசதிகள் எதுவும் கிடையாது. என்னுடைய சொந்த ஊரிலேயே எனக்கு இல்லம் இருக்கிறது. சென்னையில் வாடகைக்கு தான் இருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் படிப்புக்காக அடையாறில் வாடகைக்குத் தங்கியுள்ளேன். சொகுசு […]

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், கத்தாரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு, நான்கு வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருக்கிறார். கத்தாரின் அல் வாக்ராவில் இருக்கும் ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், செப்.11-ஆம் தேதி காலை பள்ளிக்கு பஸ்ஸில் சென்றார். போகும் வழியில் பஸ்ஸிலேயே துாங்கிவிட்டார். இந்நிலையில், பள்ளி வந்ததும் மற்ற மாணவ – மாணவியர் இறங்கி […]

மைசூருவில் இருக்கும் தூரா கிராமத்தில் வசித்து வருபவர் சோமண்ணா (50). இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மூன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சோமண்ணா வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது சோமண்ணா அங்கிருந்த ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். அவரது பசுமாடுகளை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி […]

சாலை சரியில்லை எனக்கூறி பச்சிளம் குழந்தையுடன் தாயையும் நடுவழியில் இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோடகரை பகுதியைச் சேர்ந்த 27 வயது பழங்குடியின பெண் ஒருவர் தனது 4-வது பிரசவத்துக்காக கடந்த 8ஆம் தேதியன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் 10ஆம் தேதியன்று கருத்தடை ஆபரேசன் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் அந்த பெண் […]

கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த காரணத்தால் கூலிப்படையினரால் விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் என்பவரின் மனைவி உடலைப் பெற்றுக் கொண்டார். அரவக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரவக்குறிச்சியில் உள்ள கல்குவாரிக்கு அருக ஜெகநாதன்என்பவரின் விவசாய நிலம் உள்ளது. செல்வகுமார் என்பவரின் கல்குவாரிக்கு 2015ல் அனுமதி நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு அனுமதி பெறாமல் இவ்வளவு […]