fbpx

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.. இது ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டம் குறைந்தபட்ச தொகையை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான தொகையை உறுதி செய்கிறது. இந்தியாவில் சாலை விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி 2020 முதல் 2021 வரை நாட்டில் விபத்துகள் […]

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்த வழக்கில் விசாரணையின்போது ’’ எலிபேஸ்ட் ’’ கலந்து கொடுத்துதான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். காரைக்கால் கோட்டுச் சேரியில் பாலமணிகண்டன் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வந்தான். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவர் உயிரிழந்தான். இந்நிலையில் இந்த வழக்கில்  அதே வகுப்பில் படிக்கும் மாணவியின் தாய் சகாய ராணி குளிர்பானம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.  […]

சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்ற தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியில் இருக்கும் குடோன் ஒன்றில் ஏராளமான சமையல் கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் சோதனை செய்தனர். காவல்துறையினர் விசாரணையில் பாரத் கேஸ் போன்ற பிரபல நிறுவனங்களின் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக […]

சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்டவும், “சிற்பி” என்ற திட்டத்தை, சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 100 பள்ளியில், தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு […]

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அகே இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீரவநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(19) . தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதனால் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்து மற்றும் உடற்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் , மருத்துவ பரிசோதனையில் கண் பார்வை சோதனையின்போது குறைபாடு […]

’’வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்வதாக  கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததை அடுத்து நாளை படம் திட்டமிட்டபடி வெளியாக உள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர் . ரகுமான் இசையில் நாளை வெளியாக உள்ள படம் வெந்து தணிந்தது காடு… இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் […]

உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்ய புனித பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். அதன்பிறகு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, வழி தெரியாததால், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். ஆனால், […]

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ […]

ஆதார் அட்டை என்பது தற்போது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகவும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இப்போது தேவைப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது, வேலைகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் அல்லது இணைய இணைப்பு பெறுவது போன்றவற்றிலிருந்து அடையாளத்தைக் கண்டறிய ஆதார் எண் அவசியம். ஆதார் அட்டையில் உங்கள் பெயர், பிறந்த தேதி, தொடர்பு எண், […]

காவல்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”எனது வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். வேறு […]