fbpx

கொரோனாவின் கொடிய டெல்டா மாறுபாடு கடந்த ஆண்டு அழிவை ஏற்படுத்திய பிறகு, மற்றொரு ஆபத்தான ஒமிக்ரான் மாறுபாடு கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் வெளிவந்தது.. பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன், ஒமிக்ரான் மிகவும் பரவலாக உள்ளது.. மேலும் சமீபத்திய காலங்களில் பெரும்பாலான நிகழ்வுகள் இந்த மாறுபாடு காரணமாக ஏற்பட்டவை தான்.. ஒமிக்ரானின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இந்தியா உட்பட […]

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.. ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது […]

சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா […]

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி-யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த கூட்டத்தை நடத்த முடியும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், […]

இளம்பெண் ஒருவர் 6 ஆண்டுகளாக தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.. பெண்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான குற்றம் பீகாரில் பதிவாகியுள்ளது.. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் இருந்து பதிவாகியுள்ளது. மோகன் குமார் மற்றும் ஹிமான்ஷு குமார் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. முக்கிய குற்றவாளியான மோகன், கொத்தனாராக பணிபுரிகிறார், […]

தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.. ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த சூழலில் கோடை விடுமுறை முடிவடைந்திருந்தாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் […]

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து 6 மாதம் கர்ப்பமாக்கிய நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழபாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி மகேந்திரன் பாலியல் பலாத்காரம் […]

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு […]