fbpx

மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்க்கு சாரண சாரணியர் இயக்கத்தரைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடியது. இதன் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே செயல்படுவது வழக்கம் . சில காலம் எச் ராஜா இந்த பதவியில் இருந்தார்.  பின்னர் இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்கான போட்டியில் எச்.ராஜா தோல்வியுற்றார். கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக […]

கேரள மாநிலம் திருச்சூரில் கடல் பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கியதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அள்ளிச் சென்றனர். அரபிக் கடலில்திடீர் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சூர் அருகே வாடனப்பள்ளி , பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு மீன்கள் ஒதுங்குகின்றது. குவியல் குவியலாக வந்த மீன்களை பார்த்த மக்கள் ஏராளமானோர் வந்து கூடை கூடையாக அள்ளிச் சென்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை […]

மினி கூப்பர் காருக்குள் 29 இளம் பெண்கள் நெருக்கிப்பிடித்து அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த 2014ம் ஆண்டு மினி கூப்பரில் 29 பெண்கள் அமர்ந்து சாதனை புரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் காரில் ஒவ்வொருவர் மடிமீது மற்றொருவர் , கண்ணாடி அருகே காரின் பின்பக்கத்தில் என நெருக்கியடித்துக் கொண்டு பெண்கள் அதற்குள் அடங்கினார்கள். இதை உலக சாதனையாக கின்னஸ் அறிவித்தது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சாதனையின் […]

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 62-வது பிறந்த நாளை மாமன்னன் திரைப்படக் குழுவினருடன் சிறப்பாக கொண்டாடினார். நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி ஏராளமான திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் , என நேரிலும் சமூக வலைத்தலங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் ’’ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ’’, சந்திரமுகி -2 , மாமன்னன் ’’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் […]

திருப்பூரில் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் அவர் விழுந்ததை கவனிக்காமல் பேருந்து எடுத்துச்செல்லப்பட்டதால் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. கோவை மாவட்டம் வால்பாறை அருகே வசித்து வந்தவர் அழகம்மா . கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது மகள் வீட்டு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். […]

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் கடந்து 60,115 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 62,148 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இறங்குமுகமாகவே இருந்தது. 57,423 புள்ளிகள் வரை கீழ் இறங்கிய பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் முதல் ஏறுமுகமாகசென்று கொண்டிருக்கின்றது. இன்று 322 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளை கடந்த […]

பெங்களூருவில் ஏரிகள் , மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதால்தான் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க .. நோட்டீஸ் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளியது. பெங்களூரு மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஆடிப்போனது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதையடுத்து எந்த அறிவிப்பும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றம் […]

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதையடுத்து அவரது படிப்புக்குண்டான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியை சேர்ந்த டான்யாவுக்கு அரியவகை முக சிதைவு நோய் இருந்தது. இதனால் அவதிப்பட்ட டான்யா , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல சவீதா மருத்துவமனையும் உதவ முன் வந்தது. இதற்கான […]

நகைச்சுவை நடிகர் ஒரு படத்தில் கிணறு காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பார் அதேபோல  ’’ பட்டா இடம் காணவில்லை என கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் அரை மொட்டையடித்துக் கொண்டு , பட்டை நாமமம் போட்டுக்கொண்டு பட்டா இடத்தைக் காணவில்லை என புகார் அளித்ததால் அலுவலர் பணியாளர்கள் அதிர்ந்துபோனார்கள். மனு கொடுக்க வந்த நபர் சங்கராபுரம் அருகே கொசப்பாடி […]

துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவைக் கொண்டுள்ள துபாயில் மற்றொரு அதிசயமாக ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட் ஒன்றை வடிவமைக்க உள்ளனர். கனடாவின் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிறுவனத்தால் 5 பில்லியன் டாலர் மதிப்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டு ஆண்டுகளில் இந்த ரிசார்ட்டை கட்டி முடிக்க […]