fbpx

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று பொய்யான தகவல் பரப்பிய யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரேஷன் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்றும் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஒரு யூடியூப் […]

விலங்குகள் மீது அன்பு கொண்டவரான 2-ம் ராணி எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்…. ராணி எலிசபெத் தனது 18வது பிறந்த நாளின் போது கார்கி இன நாய் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்தமான நாயை அவர் வாங்கி வளர்க்கத் தொடங்கினாராம். அவைகள் , மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். அது மட்டுமின்றி பிற விலங்குகள் மீதும் அவர் […]

ஸ்காட்லாந்தின் பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு 2-ம் ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகின்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் உயிர் பிரிந்ததால்  அவரது உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதலில் வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகரின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட் கோட்டைக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கிடையே வழி நெடுகிலும் மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி […]

பொது வாழ்வில் மகாராணி மிகவும் இறுக்கமான முகத்துடன் , எப்போதும் சீரியசாகவே வைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல நேரங்களில் நகைச்சுவை உணர்வால் நம்மை ஒரு கணம் உற்றுப்பார்க்க வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70வது ஆண்டு அரியணை விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக கரடியுடன் ’’டீ ’’ அருந்துவது போல காட்சிகள் படம் எடுக்கப்பட்டது. அதில் எதிரே அமர்ந்துள்ள பேடிங் டன் கரடி தான் […]

மதுரையில் இருந்து மாட்டுச்சாணம் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் நடைபெற்று நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளதாக வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவில் ஒரு டன் மாட்டுச் சாணம் ரூ.7,000 என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக மதுரையில் உள்ள வேளாண் தொழில்முனைவோர் பாதுகாப்பு மையத்தில் இருந்து மாதத்திற்கு 50 டன் மாட்டுச்சாணத்தை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுரை நபார்டுவங்கியின் […]

தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி, வால்பாறையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக அவிநாசியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ”இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி தொண்டர்கள் ஆதரவோடு பொதுச்செயலாளராக […]

முதலமைச்சர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட மாடம் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்த பிறகே திரவிடத்தை அதிகமாக பேசுகின்றனர். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக […]

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் […]

மனைவியின் செல்போன் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்து ஆபாசமாக பேச சொன்ன கணவன், போலீசிடம் வசமாக சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணவர் ஆகாஷ் திருமணமான பின்பும் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு […]

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் பொருளாதாரத்துறை அதிகாரி ரீனா ஆல்பர்ட். இவர் கடந்த நான்காம் தேதி வீட்டிற்கு ஹோம் டெலிவரி மூலம் மதுபானம் வாங்குவதற்காக கூகுள் தளத்தில் தேடி இருக்கிறார். அப்போது, ஆன்லைனில் மதுபானம் ஹோம் டெலிவரி செய்யப்படுவது குறித்து ஒரு நபரின் செல்போன் எண் கிடைத்துள்ளது. அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட ரீனா தனக்கு தேவையான மதுபானத்தை கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் மதுபானத்திற்கான பணத்தை […]