சங்கரன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருமணமான நான்கே நாளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன் கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா , இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கார்த்திக் ராஜாவின் பெற்றோர் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால், டாக்டர் ஒருவர் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராமதி பகுதியில் டாக்டர் கெய்க்வாட் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று இரவு, டாக்டர் தனது வீட்டின் வளாகத்தில் நடத்தி வரும் கிளினிக் கதவை மூடிவிட்டு தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிளினிக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. சாப்பிட்டு கொண்டிருந்ததால் உடனடியாக […]
திருச்சியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் ‘தமிழன்’ பட பாணியில், தமிழகத்தின் கடனை அடைப்பதற்காக தன்னுடைய பங்காக 90,558 ரூபாயை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்து அதிரவைத்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சின்னராஜா செல்லதுரை. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர், சவூதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்த படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். […]
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் இருக்கும் தெத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாற்று திறனாளி பெண் சுமதி (35). இவருடன் கடந்த மூன்று வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சுமதியும், விஜயகுமாருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயகுமார் உல்லாசம் அனுபவித்ததோடு […]
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். அதன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். அங்கு வேலை செய்ய தவம் கிடப்பர். இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் 3,500 ஆடுகள் வேலை செய்கின்றன என்றால் நம்புவீர்களா..? ஆம் உண்மைதான். விஐபிக்களான இந்த ‘தொழிலாளர்கள்’ (ஆடுகள்) கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகமான கூகுள் ப்ளெக்ஸில் அவ்வப்போது பணிபுரிய வருவார்கள். ஒரு வாரம் வேலை செய்துவிட்டுத் திரும்புவார்கள். மந்தையின் தினசரி […]
டெல்லி, எஃப்-16 போர் விமானங்களை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க அறிவித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய சக்தி வாய்ந்த எஃப்-16 போர் விமானங்களை மேலும் மேம்படுத்த ரூ.3,500 நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதத்தை காரணம் காட்டி பாகிஸ்தானை கண்டு கொள்ளாதிருந்த அமெரிக்கா திடீரென நெருக்கம் காட்டுவது ஆசிய நாடுகளின் கவனத்தை […]
இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நல்லவன்போல் நடித்து சிறுமியின் மனதில் காதலை விதைத்த இளைஞன் மிரட்டி 60 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தலங்களில் எத்தனையோ குற்றங்கள் நடந்து வருகின்றது. காதலித்து ஏமாற்றுவது, காதல் என்ற பெயரிலேயே பல குற்றங்கள் நடந்து வருகின்றது. இதைத்தெரியாத சிறுமிகள் , பெண்கள் மீண்டும் மீண்டும் அதே குழியில் விழுகின்றனர். மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் […]
அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்த விநோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி பகுதியில் வசிப்பவர் சம்பந்த் (38). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவி பன்னோ தேவியிடம் அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவியும் சரி என்று தெரிவிக்க அடுத்த நாள் காலை அவரும் […]
சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் புமோஷன் குறித்த பணிகளில் பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் […]
ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் […]