மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி அமைச்சரவை மாற்றப்படும் எனவும், மாவட்டங்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியை முதல்வர் மம்தா பானர்ஜி பறித்தார். இந்நிலையில், கோல்கட்டாவில், மம்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கும். அந்த வகையில், நேற்று ஐந்து முறை […]
சென்னை, திமுக அரசு தற்போது கருணாநிதி நினைவாக சென்னை கடற்கரையில் பேனா சிலை வைப்பதாக கூறியுள்ளது. அதை விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘அண்ணாதுரைக்கு மூக்குப்பொடி டப்பா, எம்ஜிஆருக்கு தொப்பி, ஜெயலலிதாவுக்கு மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் முகத்துவாரத்தின் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் போடப்பட்டு, கான்கிரீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. […]
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இணைந்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியின் தொடக்கத்தில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருக்கும் எடையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவர் தனக்கு சொந்தமான காரை சரி செய்வதற்காக திருக்கோவிலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். கோவிந்தனின் காரை அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ்(28) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன் அவரது நண்பர் பிரபு(32) என்பவர் சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் வந்து காரை சரி செய்து கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய போது திருக்கோவிலூர், சங்கராபுரம் சாலையில் அய்யனார் […]
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் […]
சென்னை, கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்ததால் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும் விதமாக கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை 134 அடி உயரத்திற்கு பிரமாண்டமான சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க […]
ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகளை தீயணைப்புத்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், பல நோயாளிகள் […]
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்காப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஓபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி […]
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் கருணாநியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் […]