fbpx

நவிமும்பை அருகே உரண் பகுதியில் வசித்து வருபவர் சமாதான் (35). இவரது மனைவி விஜயா (34). விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்ததால், இரண்டாவதாக சமாதானை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜயாவின் நடத்தையில் சமாதானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமாதான் அவரது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார். அவர் போட்ட திட்டத்தின்படி சம்பவத்தன்று சமாதான் அவரது மனைவி விஜயாவை அளவுக்கதிகமாக, மது […]

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 30 வயது ஒருவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பரை பார்க்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்போது, அந்த பெண்ணின் பின்னால் வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 பேர் வயலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை வழிமறித்துள்ளனர். அதன் […]

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நெல்லை, மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை முதல்‌ அதி கனமழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ […]

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசாங்கம் அகவிலைப்படியை (DA) 34 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது. மத்திய பிரதேச அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை முதல்வர் சவுகான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள எங்கள் அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை ஒன்றாக 11% உயர்த்தியிருந்தோம், ஆனால் இன்று மத்தியப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 34% […]

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்ற செய்தியின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மழைநீர் […]

கேரளாவில் இன்று 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வருட கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளா மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. […]

குரூப் அட்மின்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும், நீக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பிரபலமான மேசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் புதிய அம்சம் இப்போது சில பயனர்களுக்கு கிடைப்பதாக தெரிகிறது..புதிய வாட்ஸ்அப் அம்சம் சில காலமாக செயல்பாட்டில் உள்ளது […]

அச்சு முறிந்து கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்த தேருக்கு மாநில பொதுப்பணித் துறை எப்படி நற்சான்றிதழ் கொடுத்தது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் தரத்தை பரிசோதிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினரும், இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசின், […]

வேலையில்லா பட்டத்தாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்களிப்பட்டுள்ளது.. வேலையில்லா பட்டதாரி படத்திலும், போஸ்டரிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்திருந்தது.. இந்த புகார் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மீது தமிழக சுகாதாரத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.. இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. இதுதொடர்பாக நடிகர் தனது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் […]

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும், அவர்களும் […]