தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஆந்திர – தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, […]
சென்னை மாநகர பேருந்துகளில் தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கை 31 லட்சமாக அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் சேவை, ஆட்டோ ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பேருந்துகளில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்றால் பயணிகள் எண்ணிக்கை […]
தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி […]
திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாகவும் பேசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மனித வெடிகுண்டு என்றும், திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்போவதாகவும் மேலும் தகாத வார்த்தைகளை கூறி வசைபாடியுள்ளார். இதனால் […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தில் குடியிருப்பவர் முத்துக்குமார் (53). இவர் ஒரு கூலி தொழிலாளி. முத்துக்குமாருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் பி.எஸ்.சி. சேர்ந்துள்ளார். கல்லூரி கட்டணம் 12 ஆயிரம் ரூபாயயை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார். அவர் கூலி வேலை செய்வதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இல்லாமல் […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்று கருதப்படும் ரஜினி, கமல் இருவரும் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர்கள்.. இருவரும் மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.. இன்று வரை ஹீரோவாகவே நடித்து வருகின்றனர்.. ஆனால் ரஜினி, கமலுக்கு சமமாகவே அப்போது 2 நடிகர்கள் உச்சத்தில் இருந்தனர்.. ஆம்.. ராஜ்கிரண், ராமராஜன் என்ற இரு நடிகர்களின் பார்த்து ரஜினி, கமல் இருவருமே மிரண்டு போனதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.. கிராமத்து […]
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் பிச்சைக்கனி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிச்சைக்கனி பரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளார். மே மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பிச்சைக்கனி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது.. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மேலும் 3% உயர்த்தப்பட்டது, 34% ஆக மாறியது.. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 4 சதவீத […]
விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், மகளின் […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், விளம்பரங்களில் மோடி படத்தை ஒட்டினர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இந்த […]