fbpx

தனது நடைப்பயணத்திற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீது உள்ளிட்ட சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே …

பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இக்கூட்டத்தில் பேசிய கரூர் …

திருவள்ளூர் மாவட்டம், அத்திபட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது,அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த அனல் மின் நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு …

ஆதார் எண்ணுடன், மின் கட்டண இணைப்பு எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் …

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.…

”தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் …

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 – 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது …

அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்து வைத்திருப்பதால், இது தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஹேக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்யும் மர்ம நபர்கள், அதன் மூலம் பணம் கேட்டு தகவல்களை பரிமாறி வருகின்றனர். குறிப்பாக, …

கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிந்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையம் இயங்கி வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மின்னகம் சேவை மையத்திற்கு இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் …