அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்காப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஓபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி […]
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் கருணாநியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டு மனை பட்டா, வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து மனுக்கள் மீதான உரிய விசாரணையை […]
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “விலைவாசி உயர்வு ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல்-டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து […]
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியில் குடியிருபவர் பிரபாகர். இவருக்கு ஷியாம் என்று ஒரு மகன் இருக்கிறார். ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அறையில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்ததால் அந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தார் ஷியாம். இரவு நேரத்தில் ஷியாம் படுத்து இருந்த அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், பயந்து போய் அறை கதவை உடைத்து பார்த்தபோது தீ காயங்களுடன் […]
கடந்த ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மாதம்தோறும் கிடைக்கும் வரி வருவாய் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் வரி எவ்வளவு குறைந்துள்ளது அல்லது கூடியுள்ளது என்பது உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், நேற்றுடன் முடிந்த ஜூலை […]
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை […]
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன், பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு தங்கதுரை (38) உதயகுமார் (37) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார் டிரைவராக வேலை செய்து வரும் தங்கதுரை மனைவி ஜெயந்தியுடன் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியரான உதயகுமார் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனியில் தனியாக இருக்கிறார். இந்நிலையில் பார்வதி நேற்று இரவு தனது இளைய மகன் உதயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார் […]
கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் வேண்டிய திருத்தங்கள் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் எனறு இருந்த திட்டத்தினை பெண் பிள்ளைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் […]
சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு, இடம் தேர்வு குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. […]