fbpx

தமிழக முதலமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட, மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீசாரிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை […]

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால், 2 அணைகளில் இருந்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விநாடிக்கு 1.31 லட்சம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 16ஆம் தேதி மேட்டூர் […]

“எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது. நடப்பது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா, கடந்த 10 நாட்களாக கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இந்த புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதன் நிறைவு விழாவான நேற்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை […]

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் வரதட்சணையும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது 4-வது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42) என்பவருக்கும், தனக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிருந்தாவனம் பிள்ளையார் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,464 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 39 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (19). இவரும் புழல் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர், மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், தமிழ்ச்செல்வியின் […]

இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்க, ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.. கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே ஆந்திரா […]

மேற்கு வங்கத்தில் வேனில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சிதால்குச்சி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேன் ஒன்றில் ஜல்பேஷ் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் மேக்லிகஞ்ச் பகுதிக்குச் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வாகனத்தை ஓட்டியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். […]

2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார் என அமித் ஷா அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் நடைபெற்ற 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “2024ல் பாஜக-ஜேடியு இணைந்து தேர்தலில் போட்டியிடும், நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.” என்று தெரிவித்தார்.. 2024 லோக்சபா தேர்தலுக்கு, […]

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree தேர்ச்சி […]