வீடு மற்றும் வாகனத்திற்கு அதிபதியான குரு, புத்தாண்டு மாதத்தில் பாதி காலம் மிதுன ராசியிலும், மீதி பாதி காலம் தனது உச்ச ராசியான கடகத்திலும் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்கள் தங்களின் சொந்த வீடு மற்றும் வாகனத்திற்காக முயற்சி செய்வதற்கு இது மிகவும் சாதகமான நேரமாகும். குருவும், ராசி அதிபதியும் சாதகமாக இருந்தால், அவர்களின் விருப்பங்கள் குறைந்த முயற்சியிலேயே நிறைவேறும். இந்த புத்தாண்டில், மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் மற்றும் […]

டிசம்பர் 31 அன்று நள்ளிரவு மணி 12 அடிக்கும்போது, புத்தாண்டு உலகம் முழுவதும் தனது பயணத்தை தொடங்குகிறது. பூமியின் சுழற்சி மற்றும் கால மண்டலங்கள் (Time Zones) காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் சுமார் 26 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிலையில் உலகிலேயே முதல் நாடாக பசுபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது.. இந்த தீவு நாட்டில் 1,20,000 பேர் […]

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன. போதைப் பொருள் புழக்கமும், […]

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு கவுண்ட் டவுன், பட்டாசு, கொண்டாட்டம், புதிய தீர்மானங்கள் என்று ஒரே உணர்வில் ஒன்றாகிறது.ஆனால் ஒரு கேள்வி – ஆண்டு ஏன் இதே நாளில் முடிகிறது? இது விஞ்ஞானத்தால் தீர்மானிக்கப்பட்டதா? இல்லை மனிதர்களின் அரசியல், அதிகாரம், வரலாற்றின் விளைவா? இந்த கேள்விக்கான பதில் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து வரும் ஒரு சுவாரஸ்யமான மனிதக் கதை. இதுகுறித்து இந்த பதிவில் […]

சமீப காலங்களில், இரவில் சரியான நேரத்தில் தூங்குவது பலருக்கும் சாத்தியம் இல்லாததாக மாறிவிட்டது.. குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது முற்றிலும் சாத்தியமற்றது. ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் வேலை செய்வதால், பலருக்கு சரியான நேரத்தில் தூங்குவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு உள்ள மற்றவர்களோ, தொலைக்காட்சி மற்றும் கைபேசிகளுடன் ஒட்டிக்கொண்டு தங்கள் தூக்கத்தை இழக்கின்றனர். இருப்பினும், போதுமான தூக்கமின்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது முக்கியமாக இதய சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது […]

வெள்ளி ஒரு வேதியியல் தனிமம். இது ஒரு மென்மையான, வெள்ளி போன்ற வெள்ளை நிறம் கொண்ட, பளபளப்பான இடைநிலை உலோகம் ஆகும். இது மற்ற எந்த உலோகத்தையும் விட அதிக மின் கடத்துத்திறன் மற்றும் வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமியின் மேலோட்டில் தூய தனிமமாகவும், தங்கம் மற்றும் அர்ஜென்டைட் போன்ற தாதுக்களில் மற்ற உலோகங்களுடன் சேர்ந்தும் காணப்படுகிறது. பெரும்பாலான வெள்ளி, தாமிரம், தங்கம், ஈயம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றைச் […]