தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் 27-ம் தேதி முடிந்த […]
அதிகாலையில் எழும்புவது உடற்பயிற்சி செய்வதற்கும், அன்றாட வேலைகளை நன்றாக செய்வதற்கும் உரிய நேரத்தை தருவதோடு, நமது செயல்திறனையும் அதிகப்படுத்துகிறது. நாள் முடியும்போது, நன்றாக உறக்கம் வருவதற்கு அதிகாலையில் துயில் எழும்புவதே காரணமாகிறது. காலை 5:30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்திருப்பது பலருக்கு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான உயர் செயல்திறன் கொண்டவர்கள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை இந்த வழக்கத்தின் நன்மைகளை அறிந்திருப்பார்கள். ஆனால் அதிகாலையில் […]
மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகத்தில் (National Thermal Power Corporation Limited) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : தேசிய அனல்மின் கழகம் (National Thermal Power Corporation Limited) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 150 பணியிடம் : இந்தியா பதவியின் […]
சனி தோஷம் நீங்கச் செய்யும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பல தடை, தாமதங்கள், நஷ்டங்கள், நோய் போன்றவற்றை எதிர்கொள்வது வழக்கம். இதற்கான பரிகாரமாக, சில சிறப்புப் புனிதத் தலங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும் என ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில், சனி தோஷம் நீங்கச் செய்யும் முக்கிய […]
தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]
கொச்சி அருகே கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய விபத்தை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பிய லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. கடலுக்கு 70 கி.மீ. தொலைவில், பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்ததில், அதிலிருந்த 640 கன்டெய்னர்களும் கடலில் மூழ்கின. இதில் 13 ஆபத்தான சரக்குகள் உள்ளன என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. விபத்துக்குள்ளான வேளையில் […]
நடைப்பயிற்சி என்றால் பொதுவாக அதிகாலை நேரத்தில் செய்வதுதான் என பலர் நினைக்கின்றனர். ஆனால், மாலை நேர நடைப்பயிற்சி கூட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று பலருக்கும் காலையில் நேரம் இருக்கவில்லை. எனவே, மாலை நேரத்தை உடற்பயிற்சிக்காக பயன்படுத்துவது சிறந்த விருப்பமாக மாறியுள்ளது. உடற்பயிற்சியை மாலை நேரத்தில் செய்வது நல்லது என நிபுணர்களும் கூறுகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை, வேலைபளு மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள […]
எண்ணெய் இல்லாமல் சமைப்பது சாத்தியமில்லை. எல்லோரும் தங்கள் சமையலுக்கு வேர்க்கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உணவு வகைகளில் எண்ணெய்க்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இது சுவை மற்றும் மணத்தை அளித்தாலும் ஒருபுறம் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, எண்ணெய் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை […]
சித்தா டாக்டர் என்று வந்த ஒருவர் கதை பேசிக்கொணே 2 மணி நேரத்தை இழுத்தடித்துவிட்டார் என ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் […]
பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை […]