குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]

வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை […]

தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தூய்மை பணியாளர்கள் சென்னையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே தி.மு.க தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு தனது 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் 2 மாவட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை.. அதற்கு பதில் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி […]

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருவரும் இன்று (ஆக. 15) அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேச உள்ளனர். ‘நேட்டோ’ எனப்படும், சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி உக்ரைனுக்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் […]

குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி வழிபடுவதே சிறப்பு. அந்த வகையில், குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால், தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழர் வாழ்வியல் முறையில் குலதெய்வ வழிபாடு என்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறையாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலைமுறைகள் தொடர, ஒரு தெய்வம் ‘குலதெய்வம்’ என இருக்கும். அந்தக் குலதெய்வத்திற்கு செய்யும் வழிபாடு, சாதாரண தெய்வ வழிபாட்டில் இருந்து […]

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் நினைவுக்கூறும் வகையில் இந்த தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 79வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கோடி ஏற்றி உரையாடவுள்ளார். அதே போல், பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு, […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் […]

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் […]

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் […]