2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து கலைஞர் கனவு இல்லம் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் […]

“மரணம்” என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர் பயத்தில் நடுங்குகிறார்கள். பூமியில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும். இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் நாம் இறந்த பிறகு ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.. நவீன அறிவியலால் பல ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. விஞ்ஞானிகள் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்களை (NDEs) பகுப்பாய்வு […]

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 […]

கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் […]

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூரு சுரங்கச் சாலை (Tunnel Road) திட்டத்தைப் பற்றி வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அதாவது “இன்றைக்கு கார் இல்லாத ஆண்களை யாரும் திருமணம் செய்ய விரும்புவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.. டி.கே. சிவகுமாரின் இந்தக் கருத்தை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். டி.கே. சிவகுமார் என்ன பேசினார்? டி.கே. சிவகுமார் இதுகுறித்து பேசியபோது, “மக்கள் கார்கள் வாங்குவதில் […]

கணவன், மனைவி மற்றும் குழந்தைகளைக் கொண்ட திருமணமான பலர் கள்ளக்காதல் வைத்திருப்பதாக ஒரு சர்வே அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. குறிப்பாக, ஐடி மற்றும் மருத்துவத் துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டுள்ளனர், மேலும் இது பரபரப்பான வாழ்க்கை மற்றும் அதிக மன அழுத்தத்தால் ஏற்படுகிறது என்பதை […]

இந்தியாவின் சேவைத் துறை தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 30 சதவீதம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உலக சராசரியான 50 சதவீதத்தைவிட குறைவு, எனவே இந்தியாவில் “மந்தமான அமைப்புக் கட்டமைப்பு மாற்றம்” (structural transition) நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்பில் வளர்ச்சி இருந்தாலும் நீடிக்கும் சவால்கள் ‘India’s Services Sector: Insights […]

மனித உடலில், தமனிகள் இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்குகின்றன. ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், இதயத்தின் செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. தமனிகளில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், ரத்த ஓட்டத்தில் சிக்கல்கள் ஏற்படும். இதுவே மாரடைப்புக்கான முக்கிய காரணம். இருப்பினும், தமனிகள் அடைக்கப்படும்போது 6 அறிகுறிகள் தோன்றூம் இவற்றை நீங்கள் அடையாளம் கண்டால், விரைவில் சிகிச்சை பெற்று மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அந்த அறிகுறிகள் […]