தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் சிறிய தீக்காயங்கள் மற்றும் கண் எரிச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகளை தோல் மருத்துவர் ஷிஷிர் குப்தா பகிர்ந்து கொள்கிறார். தீக்காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக என்ன செய்ய வேண்டும், எதைப் பயன்படுத்தக்கூடாது, பண்டிகையின் போது உங்கள் சருமத்தையும் கண்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். தீபாவளி என்பது ஒளியின் திருநாள், இனிப்புகளும், சிரிப்புகளும் நிரம்பிய ஒரு பண்டிகை ஆகும். இருப்பினும், பட்டாசுகளால் ஏற்படும் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் : இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி […]

போக்குவரத்து கழகங்​களில் ஊக்கத்தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்பயிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 458 காலியிடங்களும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன. […]

செல்வத்தை ஈர்க்கவும், நிதி நெருக்கடிகளை நீக்கவும் விரும்புகிறீர்களா? தீபாவளி நாளில், லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறவும், ஆண்டு முழுவதும் செழிப்பை அனுபவிக்கவும் இந்த ரகசிய தேங்காய் சடங்கைச் செய்யுங்கள். அதை எப்படி, எப்போது செய்வது என்று தெரிந்துகொள்வோம். இந்துக்களின் தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வழிபட சடங்குகள் செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு முந்தைய நாள் […]

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]

பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை தொடங்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு சிம் எனப்படும் சந்தாதாரரின் அடையாளங்கள் பதியப்பட்ட சிம் கார்டுகளின் சேவை செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியதாக அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவைகள், இதற்கான வசதிகளுடன் கூடிய மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தச் சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் […]

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, […]

பாகிஸ்தானில் நடந்த வன்முறை போராட்டங்களின் போது TLP(Tehreek-e-Labbaik Pakistan)) தலைவர் சாதிக் ரிஸ்வி மீது 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் 250 போராட்டக்காரர்கள் மற்றும் 48 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா அமைதித் திட்டத்திற்கு எதிராக தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) என்ற தீவிரவாதக் கட்சி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியதால் பாகிஸ்தான் கடுமையான வன்முறையைச் சந்தித்தது. இந்த மோதல்களின் போது TLP தலைவர் மௌலானா சாதிக் […]