fbpx

Tattoo: கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் உடலில் வரையப்பட்டுள்ள டாட்டூக்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஒடிசாவின் சிறப்புப் பாதுகாப்புப் பட்டாலியன் படையினருக்கு அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒடிசாவில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை, மாநில தலைமைச் செயலகம், சட்டப் பேரவை, உயர் நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்கு எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். […]

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாதம் 30 நாள் நோன்பிருந்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டதும் தங்கள் விரதத்தை முடித்து பெருநாள் கொண்டாடுவார்கள். இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இனிய இரண்டு கடமைகளான நோன்பு மற்றும் ஜகாத் இரண்டும் ரம்ஜான் கொண்டாட்டங்களோடு வருவதால் இந்தப் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக […]

லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் […]

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி எம்.நாகபிரசன்னா அடங்கிய ஒற்றை நீதிபதி பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் பங்குதாரர்களிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதனை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது. நடைமுறை குறைபாடுகளை மேற்கோள் காட்டிய நீதிபதி […]

சட்டையின் மேல் பட்டன் போடாமல் வந்த நபரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அலுவலர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெங்களூருவின் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வந்த இளைஞனை ரயில் ஏற விடாமல் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரது சட்டை மேல் பட்டன்களை மாட்டச் சொல்லியும், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சுத்தமான ஆடைகளுடன் வரவேண்டும் என்றும், அழுக்கான ஆடையணிந்து வந்தால் ரயில் நிலையத்துக்குள் […]

Election: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பான புகார் அளித்திருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் […]

2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘அரசியல் சாசனமே மாறும்’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ”வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்னைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். […]

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு […]

இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பிரச்சார மேடைக்கு வருகை தந்தார். பாஜக சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் […]

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் […]