பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான வர்ணனையாளராக […]

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதாவது உள்நாட்டு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் 1118.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் […]

2019-21 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த 45 கர்ப்பிணி பெண்களில் 27 பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் MBRRACE குழுவின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசி போடாத கர்ப்பிணி பெண்களே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு தடுப்பூசியைச் சுற்றியுள்ள “குழப்பமான செய்தி” காரணமாக இருக்கலாம் என்றும் இதுகுறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் […]

அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை இல்லம் மற்றும் திண்டுக்கல் இல்லத்தின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது […]

நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் போன்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக அதிக அளவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது சாலையோர கடைகள் மூதல் பெரிய பெரிய மால்கள் வரை யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. இந்தநிலையில், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அவ்வபோது தவறுதல்களும் நிகழ்கின்றன. அதாவது சில பேர் தவறுதலாகவும் பணப்பரிவர்த்தனை செய்துவிடுகின்றனர். இருப்பினும், பணத்தை […]

இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் தொடங்கியது. முதற்கட்டமாக 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது சிறப்பு விமானம். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது. 212 பேருடன் ஏர் […]

ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும். […]

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

National Cinema Day (தேசிய சினிமா தினம்) இன்று தேசிய சினிமா தினத்தையொட்டி சினிமா டிக்கெட்டுகள் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. சினிமா என்பது மகிழ்ச்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இந்தியாவில் சினிமாவை எமோஷனலாக பார்ப்பவர்கள் உண்டு. அதனால்தான் உலகிலேயே அதிகம் சினிமா தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது. அதுமட்டுமின்றி சினிமா மீது இருக்கும் மோகத்தின் காரணமாக […]

சேலம் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 14.10.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், சென்னை அவர்களின் அறிவுரைப்படி, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட […]