ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் […]
7 Rameswaram fishermen arrested for allegedly fishing across the border..!! Sri Lankan Navy atrocities
டிஜிட்டல் இணைப்புத் துறையில் இந்தியா இப்போது ஒரு பெரிய படியை எடுக்கப் போகிறது. உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க், விரைவில் நாட்டில் தனது சேவைகளைத் தொடங்கக்கூடும். IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறுகையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்கள் மற்றும் உரிமச் செயல்முறைகள் முடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடைசி சில […]
தெலுங்கானாவின் சங்காரெட்டியில் உள்ள சிகாச்சி குளோரோ கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் 61 பேர் சிக்கியிருந்துள்ளனர். 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை கட்டுக்குள் கொண்டு […]
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சேப்பாக்கம் கில்லீஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதவுள்ளன. தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் 9வது சீசன், தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளன. சேப்பாக்கம் கில்லீஸ், தான் விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்று 14 […]
swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]
சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]
The Ajith Kumar Racing team has won first place in the GT3 Championship car race held in Belgium.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்த இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் […]

