சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.. […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி 8ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். பின்னர், திருப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய 21 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் […]
தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்திய மென்பொருள் நிபுணர் முகமது நிஜாமுதீன், இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 3 ஆம் தேதி நிஜாமுதீனுக்கும் அவரது அறை தோழருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சாண்டா கிளாரா காவல்துறையினரின் கூற்றுப்படி, காலை 6:18 மணியளவில் ஒரு அழைப்பை ஏற்ற அதிகாரிகள், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய […]
நமது பயண அனுபவங்களை தீர்மானிப்பதில் ஹோட்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் வசதிகள் மற்றும் சேவையின் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடுகளை நாம் கவனிக்கிறோம். பொதுவாக, ஹோட்டல்கள் 1 முதல் 5 ஸ்டார் வரை மதிப்பீடுகளை பெறுகின்றன. ஆனால், சில ஆடம்பர ஹோட்டல்கள் அவற்றின் பிரமிக்க வைக்கும் வசதிகளுக்காக 7 ஸ்டார் ஹோட்டல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லையென்றாலும், சர்வதேச அளவில் ஒரு சிறப்பு அங்கீகாரமாக […]
நவீன யுகத்தில், மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நகர்ப்புற வாழ்க்கை, அழுத்தம் மற்றும் வசதியின் அவசரத்தில், பலர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இதன் விளைவாக, சிறிய பழக்கவழக்கங்கள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், சில பொதுவான தவறுகளை சரிசெய்து, சமையலறையில் உள்ள சில பொருட்களை மாற்றுவதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல ஆயுர்வேத மருத்துவர் தீபக் குமார் இதுகுறித்து பேசிய போது […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
சிலர் காலையில் வெந்தய நீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடிக்கிறார்கள். பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கிறார்கள்.. அதேபோல், சிலர் காலையில் மஞ்சள் சேர்த்து வெந்நீர் குடிப்பார்கள். குர்குமின் நிறைந்த மஞ்சள், அதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. தினமும் மஞ்சள் நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது […]
முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அதை சரியாக சமைக்காதபோது பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும். முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு முழுமையாக வேகும் வரை சமைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 71°C (160°F) வெப்பநிலையில் சமைத்தால், பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். ஆனால், முட்டைகளை அதிக நேரம் சமைப்பது ஆபத்தானது. அதிக வெப்பத்தால், மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ஆக்ஸிஸ்டிரால்கள் என்ற நச்சுப் பொருட்களாக மாறும். […]
Mercedes-Benz Hurun India Wealth அறிக்கையின்படி, 2021 முதல் இந்தியாவின் செல்வம் வாய்ந்த குடும்பங்கள் வேகமாகப் பெருகி, 8,71,700 ஆக இரட்டிப்பு அளவில் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ₹8.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட குடும்பங்கள் தற்போது மொத்த குடும்பங்களின் 0.31% ஆக உள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 0.17% இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை […]
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்று. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சுமார் […]

