அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே..
ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப் பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியதுதானே. அதிமுக ஆட்சியில் அப்படித்தானே செய்தோம், இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள்” என விமர்சித்துப் பேசியிருந்தார்.. கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி ஆரம்பித்தால் மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக பிறகு விளக்கம் அளித்தார். இப்படி என்ன நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெயரை பல்டி பழனிச்சாமி என மாற்றிக் கொள்ளலாம் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதி செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெயரை பல்டி பழனிசாமி என மாற்றிக் கொள்ளலாம். அவர் திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
Read more: “கொடுமை பண்ணி கொன்றுவிட்டார்கள்” பிரசவத்தின் போது பெண் மரணம்.. மருத்துவமனையில் நடந்தது என்ன..?