பெற்றோர்களே கவனம்! வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி, 15 வயது சிறுமிக்கு 60 வயது முதியவர் செய்த காரியம்!

WhatsApp Image 2026 08 03 at 12.16.57 PM

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, முன்பின் தெரியாத நபர்களை மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை எளிதில் நம்பி அவர்களுடன் செல்லக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்றாலும் கூட, பெற்றோரின் அனுமதி இல்லாமல் யாருடனும் செல்லக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதுபோன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு பல குற்றங்களை தடுக்க உதவும். 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம், பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற 15 வயது சிறுமியை ஏமாற்றி லாரியில் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாக 60 வயது லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புகாரின்படி, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியிடம், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி லாரி ஓட்டுநர் பேசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். பின்னர், சிறுமியை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

சில தூரம் சென்ற பிறகு, மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் லாரியை நிறுத்திய ஓட்டுநர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், லாரி சந்தேகத்திற்கிடமாக நின்றிருப்பதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளனர். பின்னர், சிறுமியை பாதுகாப்பாக மீட்டதுடன், லாரி ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 60 வயது லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழச் செய்துள்ளது.

Also Read: “அம்மா… வலிக்குது மா!” 3 வயது பிஞ்சின் உயிரை பறித்த தாயின் கள்ளக்காதலன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Saranya

Next Post

8 வயது சிறுவன் மீது ஏற்பட்ட மோகம்… பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த நண்பனின் தந்தை!

Mon Aug 3 , 2026
குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் விட்டுச் செல்லும்போது கூட பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வெளிப்படையாக நம்பகமானவர்களாக தோன்றுபவர்களே சில நேரங்களில் கொடூர குற்றங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் 8 வயது சிறுவன் கொலை வழக்கில் வெளியான […]
WhatsApp Image 2026 08 03 at 12.39.46 PM

You May Like