இந்த எளிய பரிகாரம் செய்தால் தடையின்றி பணவரவு வந்து சேரும்..!! ஆன்மிக வல்லுநர்கள் தரும் டிப்ஸ்..!!

zodiac money

ஒரு மனிதன் கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணம் நிலைத்து நிற்கவும், தடைபட்ட பணவரவு தடையின்றி கிடைக்கவும், கைவிட்டுப்போன கடன் தொகைகள் திரும்ப வரவும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவான்களின் ஆசியும் மிகவும் அவசியமாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, பெருஞ்செல்வத்திற்கும் கோடீஸ்வர யோகத்திற்கும் அதிபதியாகக் குரு பகவானும், அன்றாட பணப்புழக்கம் மற்றும் ஆடம்பர, மகிழ்ச்சியான வாழ்விற்குரிய காரகராக சுக்கிர பகவானும் விளங்குகின்றனர். இவ்விரு கிரகங்களின் அருளையும் ஒருசேரப் பெற எளிய தான முறைகள் பெரும் பலனைத் தரும் என ஆன்மிக வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர்.


அதன்படி, குரு பகவானுக்குரிய வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் மலர்கள் மற்றும் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுவதோடு, முதல் நாள் இரவே ஊறவைத்த கறுப்புக் கொண்டைக்கடலையை வேகவைத்துச் சுண்டலாகச் செய்து ஆலயம் வரும் பக்தர்களுக்குத் தானமாக வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை மொச்சையைச் சுண்டலாகத் தயாரித்துக் கோயிலில் உள்ள பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

இவ்வாறு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து சுண்டல் தானம் செய்து வருவதன் மூலம் குரு மற்றும் சுக்கிரனின் தோஷங்கள் நீங்கி, அவர்களின் பரிபூரண அருள் கிட்டும். வாரந்தோறும் செய்ய இயலாதவர்கள், மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறையோ இதனைத் தொடர்ந்து செய்து வந்தால், பண நெருக்கடிகள் அகன்று எதிர்பாராத பணவரவும் பெரும் செல்வ வளமும் இல்லத்தில் சேரும்.

Read More : பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!

Next Post

பரந்தூரில் கையகப்படுத்திய நிலங்கள் இனி என்னவாகும்..? அமைச்சர் கீர்த்தனா கொடுத்த புது விளக்கம்..!!

Wed Aug 26 , 2026
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். […]
Keerthana 2026 1

You May Like