சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது.
பரந்தூர் திட்டத்திற்காக ஏறத்தாழ 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ள சூழலில், அந்த நிலங்களை அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
Read More : பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!



