அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் நாளை திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்..
இந்த நிலையில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது.. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. அப்போது அதிமுக தேர்வு செய்த 3 இடங்களுக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.. அந்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதிகள் என்பதால் அங்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் நெடுஞ்சாலையில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.. அதனடிப்படையில் தற்போது அதிமுகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.. மேலும் பட்டா இடத்தை தேர்வு செய்யுமாறும் அதிமுகவினருக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..