டாஸ்மாக் பார்களில் உணவகங்கள் நடத்த அனுமதி..!! இன்னும் ஒரு மாதத்தில் டெண்டர்..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

Tasmac Hotel 2026

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ், “நடிகர் விஜய் சேதுபதி எதை குறித்து அந்தக் கருத்தைச் சொன்னார் என்பது தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி அதுகுறித்து விளக்கம் அளித்திருந்தது. இருந்தாலும், போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தவர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்கள். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.


டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் குறித்து பேசிய அமைச்சர், “மதுபானங்கள் வாங்குவதில் எந்தவிதமான பாரபட்சமும் கிடையாது. குறிப்பிட்ட திமுகவினர் நடத்தும் 3 நிறுவனங்களில் மட்டும் மதுபானங்கள் வாங்கப்படுவதில்லை. 11 நிறுவனங்களின் மதுபானங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்” என்றார்.

மேலும், “டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், FL-1, FL-2 மதுபானங்கள் தொடர்பாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இனி வரும் டாஸ்மாக் பார் டெண்டரில் உணவுக்கூடங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் டெண்டர் நடக்கும்” என்றார்.

Read More : நிலத்தகராறில் விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூரம்..!! துடிதுடித்து இறந்த சோகம்..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

Next Post

மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்.. இனி சிக்கினால் அவ்ளோ தான்.. மத்திய அரசு அதிரடி..

Thu Sep 17 , 2026
டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் மருந்துகளின் சட்டவிரோத விற்பனையைத் தடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி, போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறார்கள் இத்தகைய போதை மருந்துகளுக்கு அடிமையாவதைத் […]
medical

You May Like