மனதின் குரல் நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கு நன்றி சொன்ன பிரதமர் நரேந்திரமோடி…..! எதற்காக தெரியுமா……?

புராதான மற்றும் அரிதான நூற்றுக்கும் மேற்பட்ட கலை பொருட்கள் உள்ளிட்டவற்றை மறுபடியும் இந்தியாவிற்கு திருப்பி வழங்கிய அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புராதான கலை பொருட்களை மறுபடியும் இந்தியாவசம் திருப்பி ஒப்படைத்த அமெரிக்க அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத் நிகழ்ச்சியின் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் இந்த மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெறும் அந்த விதத்தில், இந்த மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 103வது எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி இருக்கிறார்.

அதன்படி அமெரிக்க அரசு திருப்பி வழங்கியுள்ள 105 பாரம்பரிய புராதான மற்றும் அரிதான கலைப் பொருட்களுக்காக ஒவ்வொரு இந்தியரும் தற்போது மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கலைப் பொருட்கள் ஒவ்வொன்றும் 250 முதல் 2500 வருடங்கள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

திருப்பூர் அருகே பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி…..! வெளியான பகீர் கண்காணிப்பு கேமரா காட்சிகள்…..!

Sun Jul 30 , 2023
திருப்பூர் காமாட்சியம்மன் கோவில் வீதியில் இருக்கின்ற வணிக வளாகத்தில் அனுமத்சிங் என்பவர் குக்கர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருடைய கடைக்கு துப்பாக்கி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள், உரிமையாளரை மிரட்டி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை இறங்கிய காவல்துறையினர் பல்லடம் […]

You May Like