நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கனெக்ட். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக இவர் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களை தன் வசம் வைத்திருக்கிறார். இவருக்கு 2 திரைப்படங்களில் மகளாக நடித்தவர் நடிகை அனிகா 18 வயதான இவர், தற்போது மலையாளத்தில் உருவாகி இருக்கும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்ற அனிகாவின் எல்லை மீறிய நெருக்கமான காட்சிகள் திரை வட்டாரத்தில் சில சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த சூழ்நிலையில் நடிகை அனிகாவின் சமீபத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே பார்ப்பதற்கு நயன்தாராவை போலவே தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கோட் சூட்டில் அச்சு அசலாக நயன்தாராவை போலவே மாறி இருக்கிறார் இளம் நடிகை அனிகா. இந்த புகைப்படங்களும் தற்சமயம் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.