நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற்ற நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.. இதில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்..
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
யார் யாருக்கு எந்தெந்த துறை..?
ஸ்ரீ நாத் – மீன்வளத்துறை
வினோத் – வேளாண் துறை
கமலி – கால்நடைத்துறை
விஜய்லட்சுமி – பால்வளத்துறை
ரஞ்சித் குமார் – வனத்துறை
ஜெகதீஷ்வரி – சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு
மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
ராஜீவ்- சுற்றுச்சூழல் துறை
மரிய வில்சன் – நிதித்துறை
செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
ராஜ்குமார் – வீட்டு வசதி வாரியம்
லோகேஷ் தமிழ் செல்வன் – வணிகவரித்துறை
காந்திராஜ் – கூட்டுறவுத்துறை
விஸ்வநாத் – உயர்கல்வித்துறை
கிள்ளியூர் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
குமார் – AI துறை, தொழில்நுட்பம்
சரத்குமார் – மனிதவளத்துறை
விஜய் பாலாஜி – கைத்தறித்துறை
விஜய தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துறை
ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
தென்னரசு – அயலக தமிழர் நலத்துறை
சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலத்துறை
விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை



