Breaking : IUML எம்.எல்.ஏ அமைச்சராகிறார்..! காதர் மொய்தீன் அறிவிப்பு..! ஷாக்கில் திமுக..!

kadhar moideen vijay

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.


இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று அழைப்பு விடுத்தார்.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்திருந்தன.

அதன்படி இன்று ஐயூஎம்எல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. அதில் தவெக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று முடிவு செய்யப்பட்டது.. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் இந்த தகவலை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ தவெக அரசு பெரும்பான்மை உடன் அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.. விஜய்க்கு நன்றி..

ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராகிறார் என்று ஷாஜகான் பெயரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என ஐயூஎம்எல் மாநில நிர்வாகக் குழு முடிவு செய்யப்பட்டது.. அமைச்சரவையில் இடம்பெறும் ஐயூஎம்எல் முடிவை மு.க ஸ்டாலின் வரவேற்று இன்று காலை வாழ்த்து கூறினார். தவெக தலைமையிலான நல்லாட்சி தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் ஆதரவு அளிக்கும்.” என்று கூறினார்..

முன்னதாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியலினத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Flash : புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு.. செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை மரிய வில்சனுக்கு மாற்றம்..! முழு விவரம்..!

RUPA

Next Post

வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI சொன்ன குட்நியூஸ்..! அக்டோபர் முதல் புதிய விதிகள் அமல்..!

Thu May 21 , 2026
The Reserve Bank of India (RBI) has announced good news for banking customers. It has taken a significant decision to regulate the activities of loan recovery agents.
rbi 1 1 1

You May Like