மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

college money 2025

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 2025-2026ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். UMIS -University Management Information System (https://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கணவன் மனைவி இடையே எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும்? அறிவியல் சொல்லும் உண்மைகள்!

Tue Aug 19 , 2025
கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தில் வயது வித்தியாசம் குறித்து குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை என்றாலும், திருமணச் சட்டம், 1955, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது சட்டவிரோதமானது. பாரம்பரியமாக, நமது சமூகத்தில், ஒரு கணவன் தனது மனைவியை […]
Wedding marriage couple

You May Like