பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை…! கல்வித்துறை உத்தரவு…!

Teachers School 2025

பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய அம்சங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் வருமாறு: பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய அம்சங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் முழுமையாகப் பின்பற்றி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நோட்...! இன்று காலை 10 மணி முதல் இலவச வேலைவாய்ப்பு முகாம்...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Fri Sep 19 , 2025
தருமபுரி மாவட்டத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]
college admission 2025

You May Like