கர்ப்பிணி பெண்களே உஷார்..!100 ஆண்டுகளுக்குப் பின் இன்று சந்திர கிரகணம்….!

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நடைபெறுகிறது. இதேநாளில் பங்குனி உத்திரமும், ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த வகையில் இந்த கிரகணமானது இன்று காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணிவரை நீடிக்கிறது. இது சுமார் நான்கு மணி நேரம் நீடிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவை : பொதுவாகவே கிரகண நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் சமைப்பதையும்,சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிரகணத்தின் போது வரும் அசுத்த கதிர்களால் உணவுகள் பாதிக்க படுவதாக நம்பப்படுகிறது. எனவே கிரகணம் ஏற்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவு சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்த உணவுகள் இருப்பின் அதில் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.

கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். பயணம் மற்றும் ஏதேனும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு கோவில்களுக்கு செல்லலாம். இன்று, திருமணம் ஆகாதவர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது கூடுதல் பலன் தரும்.

Maha

Next Post

BJP: DMDK-வில் இருந்து விலகி கூண்டோடு பாஜகவில் இணைந்த தலைவர்கள்...!

Mon Mar 25 , 2024
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் தங்களை பாஜகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்கள், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜக […]

You May Like